ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா: பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2012 11:02
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பேரூராட்சி சார்பாக 50 துப்புறவு பணியாளர்கள் ஆனைமலை பேரூராட்சி பகுதி முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆனைமலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தினமும் 50 துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி நடத்தப்படுகிறது. கோவில் பகுதி, அதைச்சுற்றியுள்ள பகுதி, குண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யும் பணியும், பக்தர்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்யும் பணியும் நடந்து வருகிறது.செயல் அலுவலர் செல்வராஜ் கூறும்போது, ""வரும் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தற்காலிக இரண்டு கழிப்பிடங்கள் அமைக்கப்படும். தற்காலிகமாக 25 புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படும், என்றார்.