பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
பேரூர் : கோவை, மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில், தைப்பூச திருவிழா, இன்று காலை 6.30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சுப்ரமணியசாமி, வள்ளி, தெய்வானை சமேதரராக, கோவிலைச் சுற்றி, திருவீதி உலா வருகிறார். தினமும், காலை, மாலை யாகசாலையில் உற்சவஹோமம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சுப்ரமணியர், வள்ளி திருக்கல்யாண உற்சவம், வரும் 7ம் தேதி நடக்கிறது. மாலை, தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. பிப். 8ம் தேதி தெப்பத்தேரொட்டம் நடக்கிறது. வரும் 9ம் தேதி மாலை, கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. ஏற்பாடுகளை, கோவில் துணைஆணையர் வீரபத்ரன் செய்து வருகிறார்.