திருச்செந்தூர் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2018 11:08
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு தீபாராதனையுடன் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளில் (8ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.