பதிவு செய்த நாள்
30
ஆக
2018
11:08
காஞ்சிபுரம்: வீராணக்குண்ணம் குண்ணாத்தம்மன் கோவிலில், தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த வீராணக்குண்ணம் கிராமத்தில், குண்ணாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், தேர் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். இந்தாண்டு விழா, 21ல் துவங்கியது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, வாண வேடிக்கையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் புறப்பாடு நடந்தது. இரவு, செல்லியம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடந்தது. இன்று, காலை, 9:00 மணிக்கு குண்ணாத்தம்மனுக்கு, திருவீதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, வீராணக்குண்ணம் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.