மூணாறு: மூணாறில் இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையில் மண் சரிவால் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் சேதமடைந்தன. மூணாறில் தென்மேற்கு பருவமழை ஆக.8 ல் வலுவடைந்து ஆக.14 முதல் கொட்டித்தீர்த்தது. ஆக.15ல் அதிகபட்சமாக 34.74 செ.மீ., மழை பெய்ததால், மூணாறிலும்,சுற்றிலும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன. அதனால் குடியிருப்புகள்,பாலங்கள், ரோடுகள் சேதமடைந்தன. மூணாறில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் மண் சரிவு ஏற்பட்டன. மூணாறில் காளியம்மன் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட மண் சரிவால், நவகிரகங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கார்த்திகை மஹால் அருகில், பழைய மூணாறில் சி.எஸ்.ஐ., சர்ச் செல்லும் நுழைவு பகுதியில் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டது. மூணாறில் முஸ்லிம் ஜமாத்துக்குச் சொந்தமானமசூதி அருகே ஏற்பட்ட மண் சரிவால் அப்பகுதி ஆபத்தாக உள்ளது.