பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
பேரூர் : பேரூரில், வீரபத்ரசுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, வரும் 3ம் தேதி நடக்கிறது. விழா, வேதமூர்த்தி கிரிராஜசாஸ்திரி தலைமையில், கணபதி பூஜையுடன் இன்று துவங்குகிறது. கங்கை பூஜை, வாஸ்துபூஜை, பிரவேச பலி நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, காலை 7.30 மணிக்கு புண்ணியவாசனம், யாகசாலை பிரவேசம், சதுர்துவார பூஜை, அங்குரார்ப்பணம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, யாகசாலைபூஜை, சண்டிஹோமம், ஸ்ரீவீரபத்ரர் ஹோமமும், இரவு, பேரூர் சாந்தலிங்கர் மடத்திலிருந்து, வீரபத்ரர் கோவில் வரை, தீர்த்தகலச ஊர்வலமும் நடக்கிறது. இதையடுத்து, வரும் 3ம் தேதி, அதிகாலை 4 மணிக்கு நாடிசந்தானம், ருத்ரஹோமம் நடத்தப்பட்டு, பூர்ணகும்ப புறப்பாடு நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், கர்நாடகா கனகபுரா தேகுல்மடம் மகாலிங்க சாமி, காவெடிகெரெ மடம் நடராஜ சாமி, கோத்தகிரி பசவேஸ்வர மடம் சிவக்குமார சாமி, கர்நாடக மாநில கலால் துறை அமைச்சர் ரேணுகாச்சாரி ஆகியோர் முன்னிலையில், திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. பின்னர், வீரபத்ரசாமி, ஸ்ரீமல்லிகார்ஜூனசாமி, செல்வகணபதி, செல்வமுத்துகுமாரசாமி ஆகிய தெய்வங்களுக்கு அலங்காரம், அர்ச்சனை, மகாதீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி, காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவை வீரசைவ லிங்காய சமூக மக்கள் செய்து வருகின்றனர்.