பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்பு பணி முடிந்து பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், ரோப்கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக, ஜூலை,12 முதல், ரோப்கார் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணி முடிந்து, சிறப்பு பூஜைக்கு பின்னர் இன்று (30ம் தேதி) பக்தர்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டது.