கூடலுார்: லோயர்கேம்பில் பத்ரகாளியம்மன் கோயில் விழா கொடிமரம் நடுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில், ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கரகாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.