மதுரை:மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.டி.ஆர்.ஓ., குணாளன் முன்னிலை வகித்தார். பயிற்சி கலெக்டர் கோட்டைகுமார், துணை கமிஷனர் அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி., நரசிம்மவர்மன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன்(பொது), வெங்கடேசன்(சட்டம்) மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு இல்லாத விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். பத்து அடிக்கு குறைவான சிலைகளை ஊர்வலத்தில் எடுத்து செல்ல வேண்டும். சிலைகளை வைத்து வழிபாடு செய்ய தீயணைப்பு, போலீஸ் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும், என்றார்.