பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
அழகன்குளம்: அழகன்குளம் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.அழகன்குளத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் கோயில் உள்ளது. கோயிலில் உள்ள கணபதி, முருகன், துர்க்கை, யோக வடிவ தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அறந்தரு நால்வர், ஆனந்த ஐயப்பன், நவக்கிரகங்கள், காலபைரவர் சிலைகள் உள்ளன. 2017 செப்.,8 ல் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து, காலை 7:00 மணிக்கு ஞானமுதல்வன் வழிபாடு, கோ பூஜை, வருண மந்திர ஜெபம், தேவார பன்னிசை நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு யாகவேள்வி, பூர்ணாகுதி, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் விசஷே அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பின், நாடு நலம் பெற வேண்டி வருண பூஜை நடந்தது.