கிருஷ்ண ஜெயந்தி விழா: வீடு, கோயில்களில் கோலாகல கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2018 12:09
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, அனைத்து பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. உடுமலை நவநீதகிருஷ்ணன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இஸ்கான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் லலித்தா, கிருஷ்ணா, ராதா, விஷாகா அருள்பாலித்தனர். திருத்தணி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் கிருஷ்ணனுக்கு பல வகை பலகாரங்களை படைத்து வழிப்பட்டனர்.