பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள, டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. டி.ஜெ.எஸ்., கல்வி குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடந்த விழாவில், நிர்வாக அலுவலர் ஏழுமலை, பள்ளி தாளாளர் தமிழரசன், பள்ளி முதல்வர் சுகதா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற, உறி அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.