மேலுார்: மேலுார் அருகே நொண்டிக்கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றம் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சி கலயம், தீச்சட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தன. ஆதிபராசக்தி கோயிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆதி பராசக்தி மன்றம் அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தன. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் பங்கேற்றனர்.