பதிவு செய்த நாள்
03
செப்
2018
02:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்க முப்பெரும் விழா, கடந்த, இரண்டு நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு, இரண்டு கிலோ தங்க நகை வழங்கும் விழா நடந்தது. நேற்று சங்க, 74வது ஆண்டு துவக்க விழா மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில், கலை அரங்கத்தில் தாமோதரன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. இதில், நேற்று காலை முதல் மாலை வரை, திருவாசகம் படித்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனை வழிபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருவாசகம் பாடினர்.