பதிவு செய்த நாள்
03
செப்
2018
02:09
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, நன்செய்இடையாறில், சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. நன்செய் இடையாறு பொங்கோவில் மூங்கில் வனச்சோலை பகுதியில், சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா கடந்த ஆக.,31ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. கடந்த, 1ல் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி தீர்த்தக்குடங்களுடனும், கரகம் எடுத்து வந்தும் கோவிலை வந்தடைந்தனர். நேற்று காலை கிடா வெட்டுதல், மாலை காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சல் நீராடல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு, குடிப்பாட்டு மக்கள் மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.