பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
கிருஷ்ணகிரி: இஸ்கான் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா, நேற்று (செப்.,3ல்) துவங்கியது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், கிருஷ்ணகிரி ராயப்பன் தெருவில் உள்ள, சாந்தி திருமண மண்டபத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நேற்று (செப்., 3ல்) துவங்கியது.
காலை, 5:00 மணிக்கு, மங்கள ஆர்த்தி, துளசி பூஜை, தர்சன ஆர்த்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் ஆகியவை நடந்தன. மாலை, 5:00 மணி முதல் துளசி பூஜை, சந்தியா ஆர்த்தி, கலை நிகழ்ச்சி கள், சொற்பொழிவு, உரியடி, ராதா-கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடந்தது.
இன்று(செப்., 4ல்) காலை, 9:00 மணிக்கு, தர்சன ஆர்த்தி, கீர்த்தனம், சொற்பொழிவு, 11:30க்கு, ஸ்ரீல பிரபுபாதருக்கு அபி?ஷகமும், 12:30க்கு குரு பூஜை நடக்கிறது.
* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை மலையப்ப சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று (செப்., 3ல்) காலை, பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்து, தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதேபோல், பழையபேட்டை நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்து, தேரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த இரண்டு தேர்களும், பழையபேட்டை நேதாஜி சாலை, ஆட்டோ ஸ்டாண்ட், காந்திசிலை வழியாக ஊர்வலமாக சென்று பின் கோவிலை வந்தடைந்தது.