Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரியில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ... ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உறியடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 செப்
2018
04:09

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா இன்று (செப்.4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு மூஷிக வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நகரத்தார் கோயிலான விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். செப்.,4ல் காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி வலம் வருதலும், கொடிமரம் அருகே உற்ஸவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளலும் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவை முன்னிட்டு தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.,9 மாலை 5:00 மணிக்கு கஜமுகா சூரசம்ஹாரமும், செப்.,12ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பத்தாம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி, மதியம் திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் கடவுளர் வீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar