Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழா பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா துவக்கம் : செப்.12ல் தேரோட்டம் பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் மாவட்டத்தில் உறியடி திருவிழா
எழுத்தின் அளவு:
கடலுார் மாவட்டத்தில் உறியடி திருவிழா

பதிவு செய்த நாள்

04 செப்
2018
05:09

கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா நடந்தது. கடலுார், புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது, புதுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் உறியடி விழா நடந்தது. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உறியடித்தனர்.

சிறுபாக்கம்: சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் உறியடியும், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதியுலா வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கம்மாபுரம்: தேவங்குடி கோதண்டராமன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து, பஜனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு அமுதப்படையல், உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோன்று, கோபாலபுரம், ஊ.அகரம் கோதண்டராமன் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பெண்ணாடம்: வேதவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகிய பொருட்களால் அபிஷேகம்; 8:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணியளவில் அபிஷேகம், 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. 6:30 மணியளவில் கோவில் முன்பு உறியடி உற்சவம் நடந்தது. அதேபோல், ஈச்சங்காடு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, உறியடி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar