பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
கும்மிடிப்பூண்டி:விநாயகர் சதுர்த்தியின் போது, களிமண் விநாயகர் செய்வதற்கான அச்சு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி தினத்தின் போது, களிமண்ணில் தயாரித்த சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி, வீடுகளில் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன் பின், நீர் நிலைகளில் அந்த சிலைகளை கரைப்பதன் மூலம், நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்ணை, மீண்டும் இயற்கை வசம் ஒப்படைக்கப்படும்.
வரும், 13ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருப்பதால், அனைத்து பகுதிகளிலும், களிமண் சிலை தயாரிப்பதற்கான பணிகளில் குயவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அச்சுகள் தயாரிப்பு களிமண் விநாயகர் செய்வதற்காக, முன் பக்கம், பின் பக்கம் என, இரு அச்சுகள் தயாரிக்கும் பணிகள், தற்போது, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு அச்சுகளுக்கு இடையில் களிமண்ணை நிரம்பி, சிறிது நேரம் கழித்து அச்சுக்களை பிரிக்கும்போது, அழகிய வடிவில் விநாயகர் சிலை கிடைக்கும்.
2 அடி உயரம் கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே திப்பன்பாளையம் கிராமத்தில் அச்சு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செல்வம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னி ட்டு அரை அடி முதல், 2 அடி உயரம் வரை, சிலைகள் செய்வதற்கான அச்சுகள் தயாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.