பதிவு செய்த நாள்
05
செப்
2018
12:09
காஞ்சிபுரம்:பழமையான கோவில்களை கண்டறிந்து, அவற்றை பராமரிப்பது என, காஞ்சி பிராமண சமாஜத்தின், பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு, விஜயேந்திரர் தலைமை வகித்தார். பிராமண சமாஜதுணைத் தலைவர், கே.ஆர்.காமேஸ்வர குருக்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சங்கரமடம் சார்பில், காஞ்சிபுரம் நகரை சுற்றியுள்ள பழமையான கோவில்களை கண்டறிந்து பராமரிப்பது என, முடிவு செய்யப்பட்டது. பிராமண சமுதாயத்தினருக்கு, பித்ரு காரியங்கள் செய்ய, கீழ்கதிர்பூரில் இடம் அமைத்து தருதல் உட்பட, பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.