பவானி பண்டார அப்பிச்சி, மலையாள பகவதியம்மன் கோவிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2018 11:09
பவானி: பவானி, அரசு மருத்துவமனை அருகிலுள்ள பண்டார அப்பிச்சி, மலையாள பகவதியம் மன் கோவில் பொங்கல் தேர்த்திருவிழா நேற்று (செப்., 5ல்) நடந்தது. காலை, 7:00 மணிக்கு காடை யம்பட்டி மடப்பள்ளியிலிருந்து சுவாமி புறப்பட்டு, பவானி கோவில் வந்தது. பின்னர், கன்னிமார் பூஜை செய்து, பொங்கல் வைத்தல் நடந்தது. இன்று (செப்., 6ல்) மறுபூஜையுடன் விழா முடிவுக்கு வருகிறது. பவானி, காடையம்பட்டி,சேர்வராயன் பாளையம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.