சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள, முருங்கத்தொழுவில் அமைந்துள்ள செல்லி அம்மன் கோவிலில், பொங்கல் விழா, 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (செப். 5ல்) நடந்தது. கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29ல், சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (செப். 5ல்) காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பொங்கல் விழா தொடங்கியது. 7:00 மணி முதல் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மதியம், 12:00 மணிக்கு குதிரை துளுக்கு கேட்டல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மஹா பூஜை தீபாராதனை நடந்தது. இன்று (செப்., 6ல்) மதியம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.