பதிவு செய்த நாள்
07
செப்
2018
01:09
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலுக்கான தடாக பிரதிஷ்டை எனும் திருக்குள நிறுவுதல் விழா நடந்தது. ஈரோடு தெப்பம் மைதானத்தில் இருந்த தெப்பக்குளம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்று கிடந்தது. ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில், 49 லட்சம் ரூபாயில் புதிதாக தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகள், கடந்த, 4ல் கணபதி ஹோமத்துடன், துவங்கியது.
நேற்று (செப்., 6ல்) அதிகாலை, தெப்பத்தில் அமைந்துள்ள தடாக விமான கும்பாபிஷேகம் நடந்தது. பின், நதி தீர்த்தங்களை சேர்ப்பித்து, மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து, வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர், கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் ஆகியோர் தெப்பக்குளத்துக்கு திருவீதியுலா சென்று, தெப்போற்சவம் நடந்தது.