பதிவு செய்த நாள்
07
செப்
2018
01:09
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் போகி தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, திராவிட வேதம், சதுர்வேதம், தீபாராதனை ஆகியவை நடந்தன. மகா கணபதி, முனீஸ்வரர் மாசான காளியம்மன் ஆகிய மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, யந்திர பிரதிஷ்டை, அஷ்ட திரவிய மருந்து சார்த்துதல், கோபுர கலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலையில் மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனை, மாதேஸ்வர பூஜை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.