பதிவு செய்த நாள்
08
செப்
2018
12:09
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று (செப்., 7ல்) இரவு நடந்த பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை அடுத்த, வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவில், நேற்று (செப்., 7ல்) இரவு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது.தொடர்ந்து பெரிய சப்பர பவனி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (செப்.,8ல்), மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு, தஞ்சை, தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, தேவாலய வளாகத்தில் ஏற்றப்பட்டிரு க்கும் மாதாவின் திருவுருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று (செப்.,8ல்), விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.