பதிவு செய்த நாள்
10
செப்
2018
11:09
போடி:அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரை ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் அன்னதானம் நடந்தது.போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமிபூஜைகளும் நடந்து வருகின்றன.
இங்கு வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக் கிறது என்பது ஐதீகம். நேற்று (செப்., 9ல்) அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரா தனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார்.
விழாவினையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனைகள் நடந்தன.
* போடி பரமசிவன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். போடி அருகே வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்குதீபாராதனைகள் நடந்தது.