பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
குன்னூர்: குன்னூர் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய பெரு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நீலகிரியின் வேளாங்கண்ணி என, அழைக்கப்படும், குன்னூர் வெலிங்டன் அருகே பாய்ஸ் கம்பெனி வேளாங்கன்னி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், 36வது ஆண்டு விழா மற்றும் புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் பெருவிழா, கடந்த மாதம் 30ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, மறையுரை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் (செப்., 8ல்) நடந்த அன்னையின் பிறந்தநாள் விழா, பங்கின் குடும்ப விழா ஆடம்பர சிறப்பு திருப்பலிக்கு, ஊட்டி மறைமாவட்ட ஆயர் டாக்டர் அமல்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து அன்பின் விருந்து, ஆடம்பர தேர்பவனி நடந்தன.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஆரோக்கிய அன்னை கேட்டில் பவுண்ட், வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு வழியாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
இதில், ஆயிரக்கணக்கான உள்ளூர் பங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பங் கேற்றனர். இறையாசிர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.