பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெளிப்பேட்டைதெரு அங்காளம்மன் கோவிலில், நேற்று (செப்., 9ல்) காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால், அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு, அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவ அம்மன், வெளிப்பேட்டைதெரு, கடைவீதி, காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
* தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு அங்காளபரமேஸ்வரி கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உட்பட, பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று (செப்., 9ல்) சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.