பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
தர்மபுரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரியின் பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலை மும்முரமாக நடக்கிறது. வரும், 13ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஒரு அடி முதல், 10 அடி விநாயகர் சிலை களை, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து, வியாபாரிகள் தெரிவித்ததாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, பாகுபலி விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், பஞ்சமுக விநாயகர், எலியுடன் கூடிய விநாயகர், பார்வதி, சிவன், முருகன் ஆகியோருடன் விநாயகர் என பல்வேறு வடிவம் கொண்ட சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு அடி சிலை, 350 ரூபாய் முதல், 10 அடி சிலை, 15 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்கிறோம். விநாயகர் சிலைக்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், சிலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.