Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் களை கட்டியது விநாயகர் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
சென்னையில் களை கட்டியது விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்

14 செப்
2018
01:09

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா,சென்னையில் களைகட்டியுள்ளது.ஆண்டுதோறும், ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 5,600 விநாயகர் சிலைகள் வைக்க, ஹிந்து அமைப்புகள் முடிவு செய்திருந்தன. ஆனால், நேற்று வரை, 2,520 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரி, காவல்துறைக்கு மனுக்கள் வந்துள்ளன.மேலும், 3 அடி முதல், 13 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அனுமதி பெற்றவர்கள், ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வருகின்றனர். சில இடங்களில் லட்டு விநாயகர், பருப்பு விநாயகர், பழ விநாயகர் உள்ளிட்ட வித்தியாசமாக சிலைகள் வைத்துள்ளனர்.திருவொற்றியூர், நீலாங்கரை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் கரைக்க, காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும், களிமண் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 50 - 500 ரூபாய் வரை, சாலையோரங்களில், விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.விநாயகர் சிலைக்கான குடை, 20 முதல் 100 ரூபாய்; அருகம்புல், எருக்கம் பூ மாலை, 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த ஆண்டு, கொழுக்கட்டை தயாரிப்புக்கான, அச்சு இயந்திரங்களின் விற்பனை அமோகமாக உள்ளது. அவை, 30 - 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை நகரில் உள்ள விநாயகர் கோவில்களில், கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழி பாடுகள், நேற்று (செப்.,13ல்) முதல் துவங்கின. இன்று (செப்.,14 ல்), விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, மூன்று, கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில், பாதுகாப்பு பலபடுத் தப்பட்டுள்ளது.

சாலைகளில் நெரிசல் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இன்று (செப்.,14ல்) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ஒரு நாள் விடுப்பு எடுத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடலாம்.இதை கருத்தில் கொண்டு, சென்னையில் தங்கி பணிபுரியும், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், நேற்று (செப்.,13ல்) காலை முதலே, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதனால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில், கூட்டம் அதிகளவில் இருந்தது. சொந்த கார்களிலும், பலர் பயணத்தை துவக்கினர்.

இதனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும், திருச்சி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானகரம், சூரப்பட்டு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிகளில், வாகனங்கள், இரண்டு புறங்களிலும் அணிவகுத்து நின்றன. கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட, சென்னையில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளில், சரக்கு ஏற்றி வந்த வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar