பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
திருச்சி:விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப் பிள்ளை யார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு, 150 கிலோ கொழுக்கட்டை செய்து படைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி, மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள, உச்சிப் பிள்ளையார் மற்றும் கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோவில், மெகா சைஸ் கொழுக்கட்டை செய்து படைப்பது வழக்கம்.
நேற்று (செப்.,13ல்), உச்சிப் பிள்ளையாருக்கு, 75 கிலோவில் மெகா சைஸ் கொழுக்கட்டையும், மாணிக்க விநாயகருக்கு, 75 கிலோவில், மெகா கொழுக்கட்டையும், கோவில் மடப்பள்ளியில்
தயாரிக்கப்பட்டது.
பச்சரிசி மாவு, 50 கிலோ, உருண்டை வெல்லம், 60 கிலோ, தேங்காய் துருவல், 6 கிலோ, நெய், 30 கிலோ, ஏலக்காய், ஜாதிக்காய், எள், 4 கிலோ சேர்த்து, இரு கொழுக்கட்டைகளும் தயாரிக் கப்பட்டன.நேற்று (செப்.,13ல்) காலை, 9:30 மணிக்கு, 75 கிலோ கொழுக்கட்டையை, அடிவார த்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து தூளி கட்டி, அர்ச்சகர்கள் சுமந்து சென்று, மலை உச்சியில் உள்ள பிள்ளையாருக்கு படைத்தனர். அப்போது, பிள்ளையாருக்கு வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. படைக்கப்பட்ட கொழுக்கட்டை, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல், மற்றொரு, 75 கிலோ கொழுக்கட்டை, சிறப்பு அலங்காரத்தில் இருந்த மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.