பதிவு செய்த நாள்
14
செப்
2018
04:09
நகரி: நகரி பகுதியில் உள்ள, 10 கிராமங்களில் கங்கையம்மன் ஜாத்திரை நடந்தது. சித்தூர் மாவட்டம், நகரி டவுனை சுற்றியுள்ள, சத்திரவாடா, ஏகாம்பரகுப்பம், கே.வி.ஆர்.பேட்டை, சித்தலப்பட்டடை, குண்டராஜு குப்பம், கீழப்பட்டு உட்பட 10 கிராமங்களில், ஆண்டு ஜாத்திரை நடந்தது.
நகரி டவுனில் உள்ள தேசம்மன், ஓர்குண்டாலம்மன், கங்கை யம்மன், பொன்னியம்மன் உட்பட, பல்வேறு அம்மன் கோவில் களில் ஜாத்திரை நடந்தது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போன்று, சுற்றியுள்ள கிராமங்களில், கிராம தேவதை பொன்னியம்மன், கங்கையம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது.