தென்காசி:தென்காசி அணைக்கரை தெரு சித்தி விநாயகர் கோயிலில் வரும் 6ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது.தென்காசி அணைக்கரை தெரு சித்தி விநாயகர் கோயில், எக்கலாதேவி அம்மன் கோயிலில் வரும் 6ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. காலை 6.15 மணிக்கு விநாயகருக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 7.15 மணிக்கு எக்கலாதேவி அம்மன் கோயிலில் கும்ப பூஜை, அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.