பதிவு செய்த நாள்
17
செப்
2018
02:09
மாமல்லபுரம்:மாமல்லபுரம், பாரம்பரிய சின்னங்களில், தூய்மை இந்தியா விழிப் புணர்வுஏற்படுத்தப்பட்டது.
தொல்லியல் துறை சார்பில், மாமல்லபுரம் பாரம்பரிய கலைச்சின்னங்களில், நேற்று துவங்கி, செப்., 30 வரை, சுற்றுலாப் பயணியரிடம், தூய்மை இந்தியா விழிப்புணர்வுஏற்படுத்தப் படுகிறது.
நேற்று(செப்., 16ல்) காலை, கடற்கரைக்கோவில் வளாகத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், இத்துறை துணை கண்காணிப்பாளர், நரசிம்மன், மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர், பரணி தரன், நாட்டின் பல்வேறு பகுதி தொல்லியல் பேராசிரியர்கள், தூய்மை இந்தியா குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
அதைத்தொடர்ந்து, இப்பகுதியில் குப்பை அகற்றி தூய்மைப் படுத்தினர். பிற கலைச்சின்னங் களிலும், தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அப்பகுதிகளை தூய்மைப்படுத்துவர்.