பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
ப.வேலூர்: ப.வேலூரில், இந்து எழுச்சி திருவிழா மற்றும் விநாயகர் கரைப்பு ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில், 150 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. ப.வேலூர், மல்லசமுத்திரம், வேலகவுண்டம்பட்டிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நேற்று (செப்.,17ல்) இரவு ப.வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் கரைக்கப்பட்டன. முன்னதாக, இந்து எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மனோகர் பேசினார். பொத்தனூர் பிரமுகர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு பணிகளை சேலம் எஸ்.பி.,ஜோர்ஜி ஜோர்ஜ் தலைமையில், நாமக்கல் மாவட்ட போலீசார் மேற்கொண்டனர்.