பதிவு செய்த நாள்
20
செப்
2018
12:09
அந்தியூர்: அந்தியூர் அருகே, அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து
நேற்று செப்., 19ல், இந்து முன்னணி சார்பில், அத்தாணி, காமராஜர் புரம், செம்புளிச்சாம் பாளையம், கைகாட்டி, ஓடைமேடு, கருப்பணகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 13
விநாயகர் சிலைகள், நேற்று செப்., 19ல் மாலை பவானி ஆற்றில் கரைக்க கொண்டு வரப்பட்டன. காமராஜர்புரத்திலிருந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, மூன்று ரோடு வழியாக, அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.