பதிவு செய்த நாள்
20
செப்
2018
12:09
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், தேரோட்டம் செப்., 21 ல் நாளை நடக்கிறது. இதற்காக தேர் தயார்படுத்தும் பணி, தீவிரமாக நடக்கிறது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், தேர்த்திருவிழா கடந்த, 14ல், கிராமசாந்தி நிகழ்ச்சியுடன்
தொடங்கியது. இதையடுத்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, திருமஞ்சனம் சாத்துபடி நடந்தது. தினமும் இரவில், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனம், திருவீதி உலா நடக்கிறது. இன்று 20 ல் திருக்கல்யாணம், இரவு
புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நாளை செப்., 21ல் நடக்கிறது.
இதற்காக கோவில் தேர் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்தது. சிற்பங்களுக்கு வார்னிஷ் அடிக்கப்பட்டது. அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக, தேரில் சாரம் கட்டும் பணியும் நடந்தது.