திருச்சி: குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா செப்.,13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிம்மம், ஹம்சம், கருடன், சேஷ வாகனம், யானை மற்றும் அனுமந்த வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் இன்று (செப்., 21ல்) பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமா நடைபெற்றது. தேரில் தாயார்களுடன் வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேருக்கு பின்னால், அங்க பிரதட்ஷனம் செய்து ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 23ல், புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது.