Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் ... திருப்பதியில் திருமலை பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு திருப்பதியில் திருமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் கொண்டாடும் இந்துக்கள்
எழுத்தின் அளவு:
300 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் கொண்டாடும் இந்துக்கள்

பதிவு செய்த நாள்

21 செப்
2018
02:09

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மொஹரம் பண்டிகையொட்டி, அல்லாவுக்கு விழா எடுத்து இந்துக்கள் வெகு சிறப்பாக அல்லா திருவிழாவை கொண்டாடினர்.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதுார் கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லாவுக்கு விழா எடுத்து  இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மொஹரம் திருநாளான இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மெஹராம் விழாவிற்கு பத்து நாளாக அல்லா சாமி என்றழைக்கப்படும் “உள்ளங்கை” உருவத்தை வெளியே எடுத்து வைத்து அதற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பின்னர் நள்ளிரவு தொடங்கி  அல்லா என்றழைக்கப்படும் உள்ளங்கை திருவுருவத்தை வீதிவுலாவாக இன்று(21ம் தேதி)அதிகாலை வரை எடுத்துச் சென்றனர். அப்போது பெண்கள் வீடுகளில் புதிய மண் கலையத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின்னர்  அல்லா கோவில் முன் தீமிதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற கோரி தீயில் இறங்கி அல்லாவை வழிபட்டனர். இதை போல் கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்திலும் அல்லா திருவிழாவை கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar