Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்ததிக்கும் தொடரும் உதவி தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவுரவக்குடில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
01:09

குளிர் போக்க கணகணப்பாக நெருப்பு எரிந்தபடி இருந்தது. முக்கோணத்தின் மூன்று முனைப் புள்ளிகள் போல் அஸ்வத்தாமனும், கிருதவர்மனும், கிருபரும்  நெருப்பில் குளிர் காய்ந்தபடி இருந்தனர். அருகில் அவர்களின் தனுராயுதம்! அஸ்வத்தாமன் முகத்தில் எல்லையில்லா கோபமும் வருத்தமும் வெளிப்பட்டது. அதைக் கண்ட கிருபர், “என்ன அஸ்வத்தாமா... அடுத்த திட்டம் என்ன?” “அது குறித்து தான் யோசிக்கிறேன்” “இனியும் போரிட்டு பயனில்லை. நாம் உயிர் வாழ்வதில் கூட  பொருள் இருப்பதாக தெரியவில்லை. இத்தீயில் குதித்து ஆத்ம சுத்தியாவது அடையலாமா என எண்ணுகிறேன்...” “இதை விட எதிரியின் வாள் பட்டு மடிவது மேல் கிருபரே...” “உணர்ச்சி வசப்படுகிறாய் அஸ்வத்தாமா... நம்மை இப்போது பாண்டவர்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். நாம் களத்தில் நின்றால்  எதிர்கொள்ள திருஷ்டத்துய்மன் போல் யாராவது களத்திற்கு வருவார்கள்... அவர்களோடு மோதுவதை விட  தீப்பாய்வது மேல்...”

“கிருபரே... அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது போல பேசுகிறீரே... நான் அப்படி எண்ணவில்லை” “ஆச்சரியமாக இருக்கிறது... இனி நம்மால் என்ன செய்ய முடியும் என்று நீ எண்ணுகிறாய்?” “எதையும் செய்ய முடியும் என்றே எண்ணுகிறேன்” “உன் நம்பிக்கை வியப்பு அளிக்கிறது. பாண்டவர்களில் சாமான்ய வீரன் கூட இப்போது வெற்றிக்களிப்பில் மனோ பலத்துடன் இருப்பதை மறந்து பேசுகிறாய்...” “அவர்கள் இருந்து விட்டு போகட்டும். நேருக்கு நேர் மோதுவதாக இருந்தால் அல்லவா அந்த கவலை?”  “என்ன சொல்கிறாய் நீ?” “அவ்வளவு பேரும் அயர்ந்து உறங்கும் போது தீ வைத்துக் கொளுத்தினால்...?” அஸ்வத்தாமன் கேட்கவும், ’ச்சீய்’ என்று கோபித்தார் கிருபர்! கிருதவர்மனோ அமைதியாகப் பார்த்தான்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar