விஷ்ணுவுக்கு குண்டம் அமைத்து வேள்வி நடத்தும் போது, கபாலம் என்றொரு பாத்திரத்தை பயன்படுத்துவர். ஆகுதிப் பொருட்களை அதில் வைத்து, நெய் தடவி அக்னியில் சேர்க்கும் போது உலகளந்த பெருமாளான திரிவிக்ரம ஸ்தோத்திரம் சொல்வது மரபு.திருப்பாவையின் முப்பது பாசுரங்களில், ஒவ்வொரு பத்துக்கும் ஒன்றாக ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்றும் ‘அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த’ என்றும், ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்றும் மூன்று இடத்தில், விஷ்ணுவை ஆண்டாள் போற்றுகிறாள். திருப்பாவை என்பது வெறும் பாடல்களாக மட்டுமில்லாமல், அதுவே ஒரு யாகம் போலவும், அதிலுள்ள வரிகள் நெய் தடவிடய கபால சாதனம் சேர்க்கும் போது சொல்லப்படும் திரிவிக்ரம ஸ்தோத்திரம் போலவும் உள்ளது. மார்கழியில் மட்டுமல்ல! ஆவணி ஓணத்தன்றும் திருப்பாவையை பக்தியுடன் படித்தால், விஷ்ணுவுக்கு யாகம் செய்து வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.