பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
வரிசை எண்கள் – தமிழ் எண்கள்
1 – க – சுவாமியினுடைய அஷ்டகஜவிமானந் தேவேந்திரன் பிரதிஷ்டை
2 – உ – சுவாமிகோவில் அர்த்தமண்டபம் மணிமண்டபம்,மஹா மண்டபம்,ஆறுகாற்பீடம்,சன்னதிக் கோபுரம்,மூலப்பிரகாரத் திருமதில்களும்,சூழப்பத்தியும்,நாயகர் கோவிலும்,சூரியாதி கண்டேசுவர தேவதைப் பிரகாரத் திருமதிலும்,கோட்டை யகழும்,கோட்டைக்கு வெளியில் கீழைத்திக்கில் ஐயனார் கோவிலும்,தெற்குத்திக்கில் சப்தமாதாக்கள் கோவிலும்,வினாயகர் கோவிலும்,மேற்குத் திக்கில் ருத்சேகர பாண்டியன் பிரதிஷ்டை செய்தவை.
3 – ங – சித்தர் கோவில் விக்ரம பாண்டியன் பிரதிஷ்டை செய்தது. சுவாமி கோவிலிரண்டாம் பிரகாரத் திருமதிலும் ஒன்பது நிலைப் பெரிய கோபுரமும்,அம்மன் கோவிலிரண்டாம் பிரகாரத் திருமதிலும்,சன்னதி மண்டபமும்,சுந்தரபாண்டியன்,செய்வித்தவை- சாலிவாகன சகாப்
4 – ச – அம்மன் சன்னதி மூன்று நிலைக்கோபுரம்: ஆனந்தத்தாண்டவ நம்பி செய்வித்தது. சகாப்
5 – ரு– மாடவீதியாகிய ஆடிவீதிப் பெரிய திருமதில் திருநோக்கழகியார் செய்வித்தது. சாலிவாகன சகாப்
6 – சா– ஆடிவீதிமேற்கு ஒன்பது நிலைக்கோபுரம்:பராக்ரம பாண்டியன் செய்வித்தது. சகாப்
7 – எ – சுவாமி சன்னதி அஞ்சு நிலைக்கோபுரம் செய்தது வசுவப்பன்-சகாப்…..(மேற்படி கோவிலிரண்டாம்பிரகார மேல்புறம் ஐந்து நிலைக்கோபுரஞ்செய்தது. மல்லப்பன் சக-
8 – அ – அம்மன்கோவில் முதல்பிரகாரச் சுற்றுமண்டபமும் பள்ளியறையும் ஆறுகாற்பீடமும் நாயகர் சன்னத் மண்டபமும் செய்வித்தது.. மாவலி-
9 – கூ – மண்டப நாயகமும்;.சின்னீச்சுரமும் செய்வித்தது-சின்னப்பன். சக
10 – க0 – சுவாமிகோவில் 2-ம் பிராகாரத் தெற்கு ஐந்துநிலைக்கோபுரம்,செவ்வந்தி மூர்த்தி செய்வித்தது. சக
11 – கக – _ஷ பிராகார வடக்கு ஐந்துநிலைக் கோபுரம் செவ்வந்தி செய்வித்தது. சக
12 – கஉ – ஆடிவீதித்தெற்கு ஒன்பது நிலைக்கோபுரம் சிராமலைச்செவ்வந்தி செய்வித்தது. சக
13 – கங – சுவாமி சன்னதியில் துவாரபாலகர் மண்டபம் பொற்றாமரை வடபுற மண்டபம்-பெருமாள் செய்வித்தது. சக
14 – கச – அம்மன் சன்னதிச் சங்கிலிமண்டபம் திருவலம்பச் செட்டி செய்வித்தது. சக
15 – கரு – சுவாமிகோவில் முதற்பிரகாக் கீழ்புறந் தென்புறம் மண்டபங்கள். சக
16 – கசா – அம்மன்கோவில் 2-ம் பிராகாரக் கீழ்புறந் தென்புறம் மண்டபங்கள். சக
17 – கஎ – வன்னியடிச்சபை செல்லப்பெண் செய்தது. ச க சூ ச அரு.
18 – கஅ – சங்கிலிமண்டபத்துக்குத் தெற்குமண்டபம்-திம்மப்ப நாயக்கர் செய்வித்தது. சக
19 – ககூ – செவந்சுரம்-செவ்வந்தி செய்தது. சக (9486)
20 – உ0 – சுவாமி கோவில் முதற்பிராகாரமேல்புறமண்டபம் அம்மன் கோவிலிரண்டாம் பிரகாரத் தென்புறமண்டபம். சக-
21 – உக – சுவாமிகோவிமுதற் பிரகார மேல்புற-வடபுற- மண்டபங்கள். பட்டுத்திருமலை நாயக்கன் சக
22 – உஉ – அம்மன் கோவில் 2-ம் பிராகாரமேல்புற-வடபுற மண்டபங்கள். வீரகிருஷ்ணன் செய்வித்தவை சக.
23 – உங – அறுபத்து மூவர் கோவில் மண்டபம்- நயினா முதலி- செய்வித்தது. சக
24 – உச – சன்னதி எழுநிலைக் கோபுரம் காளத்திமுதலி செய்தது. சக
25 – உரு – அம்மன் கோவிலிரண்டாம் பிராகார மேற்கு ஐந்து நிலைக்கோபுரம் வீரத்தும்மசி செய்வித்தது.
26 – உசா – சுவாமிசன்னிதானத் துவஜஸ்தம்ப மண்டபம் 2-ம் பிராகாரச் சுற்றுமண்டபம்,சம்பந்தர்கோவில் மண்டபம்,ஆயிரக்கால் மண்டபம்,ஆடிவீதி வடக்கு ஒன்பது நிலைக் கோபுரம்,மாடப்பள்ளி-செய்வித்தது-கிருஷ்ணவீரப்பநாயக்கர்
27 – உஎ – பொற்றமரைக் கீழ்புற மண்டபமும்,திருமதிற்படியும்,குப்பையாண்டி செய்வித்தவை.
28 – உஅ – செவந்தீசுவரச் சுற்றுத்திருமதில்,சன்னதி மண்டபம்,…… யோ…னை… மண்டபம்-சின்னச்செவ்வந்தி செய்தது. சாகப்தம் சூ ச க சா.
29 – உகூ – பொற்றாமரைத் தென்புறமண்டபமும்,படியும்,திருமதிலும்,விசுநாதப் பிரதிஷ்டையும் செய்வித்தது. அப்பன்பிள்னை. சுக-சூ ரு 00.
30 – ங0 – சொக்கநாதர்மண்டபம்: வீரப்பன்,வீரையன்,சக-சூ ரு 00.
31 – ஙக – சுவாமி கோவிலிரண்டாம் பிராகார நிருதி மூலை மண்டபம் விருப்பணன் செய்தது. சக சூரு க 0 (9510)
32 – ஞஉ – வீரவசந்தராய மண்டபம்-முத்துவீரப்ப நாயக்கர் செய்தது. சக தருஙங (9535)
33 – ஞங – அம்மன்சன்னதி முதலிப்பிள்ளை மண்டபம். கடந்தை-முதலி செய்தது. சக (1535)
34 – ஙச – மீனாட்ஷிநாயக்கர் மண்டபம் ச….மு….கட்சி. சக…
35 – ஙரு – கல்யாணமண்டபம் விஜயரங்கச் சொக்கநாதநாயக்கர் செய்தது சக (9533).
36 – ஙசா – பேச்சக்காள் (லகரம்)மண்டபம்: பிட்டுச்சொக்குப்பண்டாரம் செய்தது. சக. (9580).
37 – ஙஎ– ஆடிவீதி நிருதிமூலை மண்டபம்; தும்மச்சிநாயக்கர் செய்தது. சக. (9480)
38 – ஙஅ – ஆடிவீதி அக்னி மூலை மண்டபம். ஆறுமுதலி வித் செய்தது. சக (9682)
39 – ஙகூ – ஆடிவீதி ஈசானமூலை தட்டுச்சுற்று மண்டபம்;. வேங்கடேசுவர முதலி-சக- (9694)
40 – ச0 – சேர்வைக்காரர் மண்டபம்;. மருதப்பசேர்வைகாரர்……வருடம் இல்லை.
மேற்கண்ட மதுரைத் திருக்கோவில் பற்றிய பழங்கால நிகழ்வுகளின், விபரங்களில் இது ஒரு சிறு பகுதியேயாகும். அக்காலத்தே கோவிலின் அன்றாட நிகழ்ச்சிகள். தினப்படி செலவு கணக்குகள், நிர்வாகிகிள், நிர்வாகச் செய்திகள் எனப் பல விபரங்களைத் தரும் நூல்கள் நிறைய உள்ளன. அவற்றில் பெரிதும் உபயோகப்பட்ட பழம் நூல்களில் சில: 1. சீதளப் புஸ்தகம்
2. மதுரை ஸ்தானீகர் வரலாறு 3. கே. எஸ். நீலகண்டன் அவர்கள் எழுதிய மதுரை ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோவில் எனப்படும்.
குறிப்பு: இம்மூன்று நூல்களைக் காண வாய்க்கவில்லையெனினும், அந்நூல்களையே பெரிதும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஏனைய நூலாசிரியர்களின் செய்திகளையே அடியவனும் எடுத்தாண்ட விதத்தில் இவ்வரலாறு சொல்கிறது. அம் முன்னோடி ஆசிரியர் பெருமக்களின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பணிந்தேற்றியும் நன்றிகூறும் பகுதியை இன்நூலின்கண் முதற்செய்தியாய் என்றுரையில் வைத்துள்ளேன்.