இத்தகவல் மாலையை இயற்றியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதில் வரும் செய்திகளை பெரும்பாலும் கட்டளைக் கலித்துறைகளாலும், மற்றும் சிலபல ஆசிரிய விருத்தங்களாலும் பாடப் பெற்றிருக்கின்றன. திரு. தாண்டவமூர்த்திப் பண்டாரம் இதனை இயற்றியதாக ஒரு கூற்று உண்டு. மதுரை பரமசிவ பட்டர் அவர்கள், ஸ்ரீ மு.ரா. அருணாசலக்கவிராயர் ஆகியோரிடமிருந்து கிடைத்த பழம் சிதைந்த பிரதிகளிலிருந்து திரட்டப்பட்டு எழுதியளித்தவர் திரு. பொ. பாண்டித்துரை அவர்கள். இவருக்கு கிடைத்த இன்னபிற நூல்களில் ஒன்று நெல்சன் Nelson துரை அவர்கள் எழுதிய பட்ங் The madurai country மதுரை நாடு என்ற நூலும் ஒன்று.
முற்காலத்தில் ஒருவர் செய்த திருக்கோவில் பணியை அல்லது புதிய கட்டுமானத்தை பிற்காலத்தில் அதே பணியை வேறொருவர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் வரலாறுகள் காணப்படுகின்றன. முதலிற்செய்ததை அழிவின் காரணமாகவோ பழமைச் சிதைவின் காரணமாகவோ அல்லது பூர்த்தியுறாமல் நின்றிருந்த பணிகளையோ வேறோருவர் பிரிதொரு காலத்தில் மேற்கொண்டு திருப்பணியாற்றியிருக்கலாம். இதனால் ஏற்படும் சில குழப்பங்களை பெரிதுப்படுத்துவதற்கில்லை. இது வரலாற்றுக் காலக்கணக்குகள் மாறுவடுவதால் விளைவதாகும். வரலாற்று ஆசிரியர்கள் பல யதார்த்த ஆதாரங்களின் மூலமும், ஆராயப் புகுவதுண்டு. அதன்படியும் நிகழ்ந்திருந்த பணியின் உத்திகள் அதன் அடிப்படை ஆகமவிதிகள், மற்றும் சில ஸ்பதிகளின் பாணிகள் இவற்றினைக் கொண்டு இதை, இன்னகாலத்தில், இன்னாரால்தான் செய்திருக்க முடியும் என நிர்ணயிர்க்கிறார்கள். எதுவாயினும் அன்றும் இன்றும் திருக்கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல் தற்காலம் இன்நூல் தொகுக்கப்படும் வேளையில் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அனேக பழுதுகள் நீக்கப்பட்டு பழமையைக்காப்பாற்றும் சீரிய முயற்சிகள் வெற்றிபெற்று சிறப்படைய சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி திருவருள் என்றும் துணைநிற்கும்.
தொடரும் திருப்பணிமாலை காலங்கள், வரிசைஎண்கள், காணப்பெறும் தகவல்களின்படி அப்படியே குறிப்பிட்டிருக்கிறபடியால் வாசக அன்பர்களின் தெளிவிற்காக நடைமுறை எண்களுக்கு எதிராக தமிழ்எண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.-
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
20. திருப்பணிமாலை - திருப்பணி விவரம் »