ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு மகா உற்ஸவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு ஷீரடி சாய் சேவா சமிதி சார்பில் 13 நாள் ரத யாத்திரை நிகழ்ச்சி கொண்டாட ப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28 முதல் அக். 10 வரை ராஜபாளையம் மற்றும் சத்திரப்பட்டி சுற்று வட்டாரங்களில் பாபா உற்ஸவ மூர்த்தியை ரதத்தில் சுற்றி வந்து பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது.
ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக, ராஜபாளையம் மாடசாமி கோயில் பகுதியில் பொது மக்கள் தரிசனத்திற்காக சாயிபாபா உற்ஸவமூர்த்தியை வைக்கப்பட்டிருந்தது.
காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தியுடன் தொடங்கி மாலை 4:00 மணிக்கு பெண்கள் குழந்தைகள் கோலாட்டம் ஆடி வழிபட்டனர்.
மாலையில் ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கி ஒட்டகம், குதிரை வாகனங்களின் அணி வகுப்பில் மேலதாளங்களுடன் பக்தர்கள் சூழ, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாய்சேவா சமிதியினர் செய்திருந்தனர்.