பதிவு செய்த நாள்
04
அக்
2018
11:10
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் லட்சுமி, சரஸ்வதி, துர்கை போன்ற பெண் தெய்வங்கள் போற்றப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் அலங்கார படிகளில் கொலு பொம்மைகள் வைப்பதுண்டு. ஆண்டுக்காண்டு படிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதில் பயன்படுத்தும் வண்ண பொம்மைகள், திண்டுக்கல்லுக்கு கடலூர், திருச்சி, காஞ்சிபுரம், மதுரையில் இருந்து கொலு பொம்மைகள் அதிகம் விற்பனைக்கு வருகிறது. காகிதம், மரக்கூழால் செய்யப்பட்டு, செயற்கை வண்ணம் சேர்க்காமல் செய்யப்படும் விநாயகர், அம்மன், சிவன், ராமர், கிருஷ்ணன், திருமணம், கடை வீதி என ஏராளமாக வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை பொம்மைகள் விற்கப்படுகிறது.
இந்தாண்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் அருகே சர்வோதயா சங்க காதி பவனில் புது வரவாக ஜலக்கிரீடை எனும் பெண்கள் குளிப்பது போன்ற பொம்மைகள், ராமர் பாலம், சுக்கிர தர்பார், பெண் சீமந்த விழா, மாயா பஜார், உறங்கும் கும்பகர்ணன், விளக்கு பூஜை, பல்வேறு அவதாரங்களில் ஜோதிலிங்கம், குபேரர் செட், தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போன்ற பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நவராத்திரி விழாவுக்கு ஒரு வாரமே இருப்பதால் பலர் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர். வியாபாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் வீடுகளில் கொலு வைப்பவர்கள் அதிகரித்துள்ளனர். கொலு வைப்பதால் மன நிம்மதி கிடைப்பதால், சங்கடங் கள் நிறைந்த இல்லமும் கூட திருவிழாவாக மாறும், என்றார்.