இளையான்குடி முத்துமாரியம்மன் கோயிலில், முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2018 12:10
இளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் முத்துமாரியம்மன் கோயிலில், கிராம மக்கள் மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரிதிருவிழாவை நடத்தினர்.
இதையொட்டி, காப்புக் கட்டி, பெண்கள்விரதமிருந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்புஅபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று (அக்., 3ல்) முக்கிய வீதிகளின் வழியாக, கிராமமக்கள் முளைப்பாரிகள் எடுத்து சென்று கண்மாயில் கரைக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.