பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
நாமக்கல்: குருபெயர்ச்சியை முன்னிட்டு, உலக நன்மைக்காக, வரும், 6ல் நாமக்கல்லில் குரு பூஜை துவங்குகிறது. நாமக்கல் - துறையூர் சாலையில், சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு பூஜ்யஸ்ரீ சங்கரய்யர் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார்.
குருபகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, வரும், 6, 7ல், சித்திவிநாயகர் கோவில் சார்பில், நாமக்கல் எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில், உலக நன்மை வேண்டி சிறப்பு மகா யாக பூஜைகள் நடக்கின்றன.
முதல்நாள் மாலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு மற்றும் சிறப்பு பூஜை; மறுநாள் காலை, 7:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், 9:00 மணிக்கு, குரு மகா யாகம்; தொடர்ந்து, பூர்ணாஹூதி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 4:15 மணிக்கு, பூஜ்யஸ்ரீ சங்கரய்யர், குரு பெயர்ச்சியால், ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
நாமக்கல்: துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு குருபகவன் இன்று (அக்., 4ல்) இரவு, 10:05 மணியளவில் இடம் பெயர்கிறார். நாமக்கல், கோட்டை சாலை, கோட்டை பிள்ளையார் கோவிலில் இன்று (அக்.,4ல்) மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், சுப்ரமணியர், துர்க்கை, நவக்கிரக, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கு மூலமந்திர ஹோமம் நடக்கிறது.
இரவு, 8:00 மணிக்கு குருபகவானுக்கு அபிஷேகம், 9:58 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. நாமக்கல் அடுத்த, பாப்பிநாயக்கன்பட்டி கிராமம் கருங்கல் பாளையம், கரையாம்புதூரில் உள்ள கருமலை, பாலதண்டாயுத பாணி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை (அக்.,5ல்) காலை, 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, குருபகவானுக்கு மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.