பதிவு செய்த நாள்
05
அக்
2018
11:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சியை யொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஏகதின லட்சார்ச்சனையும் நடந்தது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் காயாரோ கணீஸ் வரர் கோவில் வளாகத்தில், குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று (அக்.,4ல்) இரவு, 10:05 மணிக்கு,சிறப்பு தீபாராதனை நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (அக்.,5ல்) காலை, வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தரிசன வழிகள் அமைக்கப் பட்டுள்ளன.
காலையில் இருந்து லட்சார்ச்சனை நடைபெறும்.காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், வரும், 7ல், காலை, 7:30 மணிக்கு மேல், நவ கலச ஸ்தாபனம், விசேஷ பூஜைகள், ஹோமம், பூர்ணாஹூதி, கலசா பிஷேகமும், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெறுகிறது.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு யாகம், லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.அந்த வகையில் நேற்று (அக்.,4ல்), குரு பகவானுக்கு வெளி பிரகாரத்தில் உள்ள வளாகத்தில், இரவு, 7:00 மணி க்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மஹா அபிஷேகமும், தூப தீப ஆராதனை யும் நடந்தது.பக்தர்கள், பிரார்த்தனை யாக மலர் மாலைகள், மஞ்சள் நிற துண்டுகள், கொண்ட கடலை மாலைகளை சமர்ப்பித்தனர்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி, எம்.எஸ்.ஆர்., கார்டனில் உள்ள தட்சிணா மூர்த்தி கோவில், எஸ்.பி.முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில், புதுகும்மிடிப் பூண்டி கிராமத்தில் உள்ள, 1,000 ஆண்டு பழமை வாய்ந்த பாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஸ்தலங்களில், இன்று (அக்.,5ல்), நாள் முழுவதும், சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்கள் நடைபெற உள்ளன.