வத்திராயிருப்பு: தமிழகம் கனமழையை எதிர்நோக்கி உள்ளதால் செப்.,8ல் நடக்க உள்ள அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கனமழை பெய்தால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இன்று முதல் 4 நாட்களுக்கு திறக்கப்படுவதாக இருந்த மலைப்பாதை திறக்கப்படாது. அமாவாசைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்றனர்.