பதிவு செய்த நாள்
06
அக்
2018
10:10
திண்டுக்கல், திண்டுக்கல்லில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார். இதை முன்னிட்டு திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர், வெள்ளை விநாயகர், அபிராமி அம்மன் ஆகிய கோயில்களில் சுவாமி தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சின்னாளபட்டி : சின்னாளபட்டி கடைவீதி சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிேஷகத்துடன், பலவித மலர் அலங்காரம் செய்யப்பட்டது. நான்முகவர் சுவாமிக்கு, குங்கும அபிேஷகம் நடந்தது. தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு கலச பூஜை, விசேஷ மலர் அலங்காரத்துடன் மூலமந்திர ஹோமம், விசேஷ பூஜைகள் நடந்தது. கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், குரு பெயர்ச்சி யாக பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.